Monday, 5 November 2012

என் நண்பனின் உணர்வுகள் எனது வரிகளில்

நேசித்தேன் - என் அருகில் தோழியாய் இருந்தபோதும்
நேசித்தேன் - என்னை விலகி இல்லறம் கொண்டபோதும்

இன்று தாய் தந்தையரிடத்தில் 
நாளை மனைவி மக்களிடத்தில்
என உணர்வுகள் ஆயிரம் நான் கொண்டாலும்
உன்மீது நான் கொண்ட உணர்வு என்றும் இறக்காது

இது சரியா தவறா தெரியவில்லை
இவ்வுணர்வுகளை அழிக்கவும்  முடியவில்லை
இவ்வுலகில் எனக்கு மட்டும் புரிந்த
இன்பமான துன்பம் இது

நேசிப்பேன் - என் உடல் கல்லறையில் விழும்போதும்
நேசிப்பேன் - மீண்டும் கருவறையில் உயிர்த்தெழும் போதும் 
நேசிப்பேன் . . . நேசிப்பேன் . . .

Saturday, 13 October 2012

பேருந்து பயணம்

சிலிர்க்கும் சாரல் சிரிக்கும் சூரியன்
இனிக்கும் இசை இன்பமூட்டும் இயற்கை
தவிக்கும் தனிமை கூவும் குடிசைதொழிலாளிகள்
மௌனமான மேகம் கற்பிக்கும் குரல்
ஓடும் செடி கொடிகள் ஓய்வேடிக்கும் மனிதர்கள்
- பேருந்து பயணம்

விடை

கண்முன்னே காணும் அழிவுகள் அனைத்தும்
உன்னுள்ளே இருக்கும் கொடியவனை கொள்ளத்தனோ..?
உனது ஜனனம் என்னும் வினாவிற்கு விடையோ..?

போதிமரம்

என்ன செய்தாய்
என்ன செய்கிறாய்
என்ன செய்யவேண்டும்
என அனைத்தும் உணர்த்தும்
உனது தனிமை தான்
உனக்கு உண்மையான போதிமரமோ..?

Saturday, 25 August 2012

கயல்விழி கண்கள்

கயல்விழி  - அவள் கண்களை கண்டவுடன்
கவலைகள் அனைத்தும் கரைந்து காதலாய்
மலர்கிறதே !

Saturday, 28 July 2012

இசை

கவலை என்னும் ஆட்கொல்லி நோய்க்கு 
கடவுள் படைத்த அற்புத மருந்து 
இசை .

Saturday, 26 May 2012

நிலா

சின்னஞ் சிறு குழந்தையின் அழகில் வியந்து 
அதன் அன்னை வைத்தாள் கருநிற பொட்டு 
நீண்ட நீல வானின் அழகில் வியந்து 
இயற்கை அன்னை வைத்தாள் வெண்ணிற பொட்டு 

பெங்களூர்

தேவதைகள் வாழும் தேசம் இது 
சொப்பனத்தில் காணும் சொர்க்க பூமி இது 
நினைத்தவை யாவும் நீ இங்கு நிகழ்த்தலாம் 
பெங்களூர் . . .

அன்னை

உன் ஆதி முதல் 
அவள் அந்தம் வரை 
அனைத்தும் நீ என வாழ்பவள்
- அன்னை

சொர்க்கம்

வெண்ணிலவின் முகம் 
வெகுளித்தனமான குணம் 
குழந்தை பேச்சு 
கொஞ்சும் சிரிப்பு .....
அவ்வானுலகில் இல்லை 
இப்பூவுலகில் தான் உள்ளது 
சொர்க்கம் .

Saturday, 5 May 2012

மாறி மழை

நீண்ட நாட்கள் பிரிவின் பின்
வெண்மேகங்களை சந்தித்த கருமேகங்கள்
சிந்தும் ஆனந்த கண்ணீர் தான் மாறி மழையோ !
தன் நினைவாய் அவை விட்டு செல்லும்
காதல் பரிசு தான் வானவில்லோ !

திகட்டாத தேன்

நித்தம் நித்தம் சுவைத்தாலும்
திகட்டாத தேன் உன் முகமடி
சில நொடி சிரித்தாலும்
பல கோடி இன்பம் தரும் உன் சிரிப்படி

உன் சப்தம்

யுத்தங்கள் பல வென்றவனும்
சற்று  உன் சப்தம் கேட்டால்
குண்டுகள் சுமந்த கைகளால் பூ
சென்டுகள்  சுமந்து உன்னை பின்தொடருவான்

Friday, 4 May 2012

மலர்

அழகென்னும் இன்பத் தேன் 
என்றும் வற்றாத மலர் நீ அடி
அத்தேன்னை  நித்தம் நித்தம் சிறிதும் சலுப்பின்றி
பருகும் பொன்வண்டு நான் அடி

Saturday, 21 April 2012

என் உலகம்

சோடிய விளக்கின் ஒளியில் உன்
சிறு முகம் பார்த்தேன் என்
சிந்தனைகள் அனைத்தும் துளைத்து
சிதைந்து போனேன் . . .

உலக அதிசியங்கள் பார்த்ததில்லை எனினும்
என் உலகே நீ என் அருகில் இருந்தால்
அதிசியங்கள் எதுவும் அவசியமில்லை
என் உலகில் ........

Sunday, 1 April 2012

அவள்

காற்றாய் வந்தாள் என்னுள்
காதலை விதைத்தாள் மனதை
களவு கொண்டாள்
கண்ணிமைக்கும் முன் மறைந்துவிட்டாள்
. . .
இதயம் துடித்தும் உயிரில்லை
நொடிகள் கடந்தும் நினைவில்லை . . .

Saturday, 24 March 2012

கண்ணாடி குவளை

கண்ணாடி குவளை - பெண்ணிடம்
ஆண் கொண்ட உறவு
கவனம் மிக அவசியம்.
குவளையில் நீந்தும் மீன் குட்டி
பெண்ணின் மனது
ஓர் இடத்தில என்றும் தங்காது

Sunday, 4 March 2012

மது

மதுவின் மேல் கொண்ட மயக்கமா
மதுவினால் கொண்ட மயக்கமா
மனிதா ஏன் இப்படி மனநிலை இழந்து
மதிகெட்டு போகிறாய்

தமிழ் பற்று

புத்தகங்கள் படித்ததில்லை ஏன் பார்த்ததுகூட இல்லை
புத்தியையும் தமிழ் பற்றையும் மட்டுமே கருவாய்
கொண்டு கிறுக்கிறேன் கவிதைகளை.

கொண்டேன் கொன்றேன்

இமை திறக்கும் நேரத்தில் காதல் கொண்டேன்
இமை மூடும் நேரத்தில் காதல் கொன்றேன்
ஆனாலும் காதல் என்னும் இன்பக்கணியை
பருகச் செய்தமைக்கு மிக்க நன்றி .

சிறந்த கவிதை

எழில் கொஞ்சும் முகம் - எதுகை
மிதமான நீண்ட கூந்தல் - மோனை
ஈரடியில் இருக்கும் இதழ்கள் - வெண்பா
கண் கண் , பல் பல் - சிலேடை
அச்சம் மடம் நாணம் - இலக்கணம்
பிறருக்காக பிறந்து வாழ்பவள் - பொருள்
அனைத்தும் கொண்ட அதிசய பெண்ணே
அகிலத்தில் நீ தானடி
தலை சிறந்த கவிதை . . . . . .

காதல் காய்ச்சல்

அவள் அழகின் மழையில் நனைந்து
காதல் காய்ச்சல் கொண்டு
கவிதையாய் இருமுகிறேன்

மாற்றம்

மாற்றம் அடையாதது மாற்றம் மட்டும் இல்லை
ஆண்களின் மனதும் தான்
அழகிகளை கண்டவுடன் அலைபாய
தொடங்கிவிடும்

Saturday, 3 March 2012

பெங்களூர்

அழகிகள் என்னும் அலைகள் வந்து
மோதும் அழகிய கடற்கரைதான்
பெங்களூரோ !

மௌனம்

உன் தாயின் கருவறை முதல்
பூமித் தாயின் கருவறை வரை
உன்னிடம் என்றும் நிலைத்து நிற்பது
உன் மௌனம் மட்டும்தான்

Saturday, 25 February 2012

மறக்காதே

மறக்க நினைத்ததை மறந்து கூட நினைக்காதே
நினைக்க விரும்புவதை நொடிபொழுது கூட நினைக்க மறக்காதே

Saturday, 28 January 2012

என் கயல்விழி

மொழி வழியாக பேசவில்லை
விழி மொழியால் பேசினேன்
கண்மை நிறைந்த என்
கயல்விழியோடு . . .