Monday, 8 September 2014

கோடி இன்பம்

தாய்க்கு செய் , செய்க்கு தாய் ,
குடிக்க நீர் , புசிக்க உணவு ,
இனிக்கும் இசை , எழில்மிகு இயற்கை ,
இளமையில் விளையாட்டு , பருவத்தில் காதல் ,
நெருங்கிய நண்பன் , ஆருயிர் தோழி ,
விரும்பிய வேலை , உழைப்பிற்கு ஊதியம் ,
அழகான மனைவி , அன்பான கணவன் ,
ஆசைக்கு மகள் , பெருமைக்கு மகன் ,
முதுமையில் அமைதி , அமைதியில் மரணம் ......

என எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ....
இதை அறியா மாந்தர் இப்புவி வாழ்வை எண்ணி
புலம்புவது ஏன் ?
தூற்றுவது ஏன்?

வடநாட்டு அள்ளி

கொதிக்கும் எண்ணையில் குதிக்கும் கடுகு
அவளது சினப் பார்வை
கார்மேகங்களில் ஒளிந்து எட்டிப்பார்கும் நிலவு
அவளது புன்சிரிப்பு
துள்ளி ஓடும் புள்ளி மானையும் தள்ளி ஓடும் 
அவளது உற்சாக நடை
அகிலத்தின் ஆண் ஆதிக்கம் அனைத்தையும் சிறை பிடிக்கும்
அவள் அணிந்திருகும் வலயங்கள்
ஒழுக்கத்தில் சிறந்தவனையும் சிறிதாய் தவறு செய்ய தூண்டும்
அவளது வளைவுகள்
வறண்டு இருண்ட பூமிக்கும் குளிர்ந்த நறுமணக் காற்றை வீசும்
அவளது கூந்தல் 
என்றும் கோர்த்து நடக்க வேண்டும் என இச்சை ஊட்டும்
அவளது பச்சை குத்திய கைகள் 

ஏகோபித்த பேரழகை தன் வசம் அல்லி வந்த
வடநாட்டு அள்ளி அவள்......

Monday, 7 July 2014

இளம் சூடான நீரில் குளித்த கூந்தல்
சிற்பதத்தில் நிபுணத்துவம் அறிந்தவன் செதுக்கிய தேகம்
பல கோடி ஆண்டுகள் இவ்வுலகிற்கே
தடையில்லா மின்சாரம் தரக்கூடிய கண்கள்
பொத்தி பொத்தி பாதுகாத்த பால் வண்ண முகம்
பளிங்கினும் மெல்லிய தோள்கள் 
அத்தோள்களில் இப்புவி மறந்து நர்த்தனம்
ஆடும் நண்பா 'ஈ'
ஒரு கணம் நீயாக நான் மாறேனோ

பகல் கனா

ஆண்டுகள் பல கோடி
அதில் காதலர்களும் பல கோடி
ஆனாலும் ஓவ்வொன்றும்
புதிதானது புத்துயிர் பெற்றது 
அப்புத்துயிர் என்னையும் புதுபிக்கும் என 
கனாக்கள் கோடி காண்கிறேன்
பகலில் மட்டும் பலிக்கும் என்று ...

சிவன்

அனைவருக்கும் உரியவன் இவன்
ஆதியும் அந்தமும் ஆனவன் இவன்
இயற்கையின் பிறப்பிடம் இவன்
ஈகையின் ஊற்றிடம் இவன்
உண்மையின் சுய ரூபம் இவன்
ஊக்கத்தின் மறு உருவம் இவன்
எண்ணில் அடங்காதவன் இவன்
ஏழ்மையின் மறு பெயர் இவன்
ஐயங்களை நீக்குபவன் இவன்
ஒழுக்கங்களை போதிப்பவன் இவன் 
ஓம் காரத்தின் மூலதனம் இவன் 
ஒளடதமாய் விளங்குபவன் இவன் 
அஃறினைக்கும் அன்பானவன் இவன்
அவன் சிவன்.

சிவாய நம ஓம்....

Tuesday, 13 May 2014

பெண் ஒருத்தி இல்லை

சாதி மதம்
குலம் கோத்திரம்
உற்றார் உறவினர்
அந்தஸ்து கெளரவம்
என எதுவும் தடையில்லை
எனினும் பெண் ஒருத்தி இல்லை
மையல் கொண்டு மணம் புரிவதற்கு ......

சீர்மிகு சிங்கை

ஓய்வின்றி ஓடும் மனிதர்கள்
முடிவின்றி உயரும் கட்டிடங்கள் 
தமிழ் நாட்டிலும் இறந்த தமிழ் வார்த்தைகள்
அகிலத்திலும் இறந்த நல் ஒழுக்கங்கள்
கட்டாய ராணுவ சேவை
கல்வி முடிந்ததும் வேலை

விடியும் வரை ஆட்டம்
விடிந்த பின் தூக்கம்
குறைந்த ஆடையில் நிறைந்த பெண்கள்
நிறைந்த ஆடையில் குறைந்த பெண்கள்

முதுகுடைந்த முதுமையிலும் வேலை 
இனிமையான இளமையிலே காதல்
நடுநிசியில் ஓட்டம்
இன்னிசையில் ஆர்வம்

என அனைத்தும் காணலாம்
சீர்மிகு சிங்கையிலே....