Sunday, 7 July 2013

பெருமிதம்

எனது பெயரும் பெருமை அடைந்தது
உனது உதடுகள் உச்சரித்த போது
பொன்வானமும் விண்மேகமும்
எனது அருகில் வந்தது
உனது விழிகள் எனது விழிகளை பார்த்த போது
சப்தங்கள் அனைத்தும் நிசப்தம் ஆனது
உன் அழகென்னும் ஆற்றில் நான் துள்ளி குதித்து
நீந்தி பெருமிதம் கொண்ட போது 

வெகுளிகள்

இருவரின் வாய் வார்த்தைகள் இடும் யுத்தம்
உண்மை என எண்ணி வியந்து நிற்கும் நண்பர்கள் பாவம்
இருவரின் மன வார்த்தைகள் இடும் முத்தங்களை
அறியாத வெகுளிகள்

மாயை

இரும்பு போன்ற இதயம் கொண்ட வீரனையும்
இளம் பஞ்சு போன்ற இதயம் கொண்ட கவிஞனாய
மாற்றும் மாயை தான் காதல்

மறக்கிறேன்

நாணம் என்னும் போர்வையை
விலக்கி நீ பார்க்கும் பார்வையும்
மானம் என்னும் ஆடை
அணிந்து நீ பேசும் வார்த்தைகளும்
ஞாலம் என்று ஒரு பொருள்
இருப்பதையே மறக்க செய்கிறதே

கவிதை மரம்

காதல் விதையை நீ என்னுள் விதைத்ததால்
கவிதை மரம் தமிழ் கனிகளுடன்
பூத்து குளுங்குகிறதே

சிற்பம்

காதல் என்னும் இன்பத்தை அணிந்து
தூக்கம் என்னும் துன்பத்தை துளைத்து
தமிழ் என்னும் உளியை கொண்டு
கவிதை என்னும் சிற்பத்தை செதுக்குகிறேன்

நாய்கள் ஜாக்கிரதை.

எலும்பு துண்டுகளை தேடி அலையும்
தெரு நாய்களை போல்
பணத் துண்டுகளை தேடி அலைகின்றன
காவல் நாய்கள்
பணப் பித்தம் அதிகரித்து அவர்கள்
வெறி நாய்களாய் மாறும் முன் விழித்து கொள்ளுங்கள் ........
நகரத்தில் நுகர்வோரே வாகன நகல்களை எடுத்து செல்லுங்கள்
நாய்கள் ஜாக்கிரதை.

என் துணைவி

பல பேருந்துகள் பல பயணிகள்
சில பயணிகளுக்கு துணைவிகளும் உண்டு
எத்துணைவியும் என் துணைவிக்கு ஈடு இல்லை

குழந்தைக்கு பசியாற சோறுட்டுவால்
சோர்ந்துவிட்டால் இளைப்பாற இன்பமூட்டுவால்
ஏழைக்கு இலவசமாய் ஒலியூட்டுவல்

கதிர் அவன் இருக்கும் திசை செல்ல மாட்டாள் - அச்சம்
அவ்வப்போது கருப்பு கம்பளி கொண்டு ஒளிந்துகொள்வாள் - நாணம்

நிறைந்த வட்ட முகம்
பால் வெள்ளை நிறம்
முத்தான வெகுளிச் சிரிப்பு

என் துணைவி அவளுக்கு
எத்துணை வியும் ஈடு இல்லை 

இருதயம் வெடிக்கிறது

கண்ணோரத்தில் கண்ணீர் சிரிதாய் கண்டால்
இருதயம் பெரிதாய் வெடிக்கிறது கண்மணியே
இனிய இன்பமுகத்தில் துன்பம்  சிறிதாய் கண்டால்
இரத்த நாளங்களும் நாடி நரம்புகளும்
எரிமலையாய் வெடித்து நெருப்பு குழம்பினை
உமல்கிறது கண்மணியே ..........

காணவில்லை கவிஞனை

ஈரம்நிறைந்த  இருதயம் இறந்துவிட்டதா
கொஞ்சும் கவியோசை குறைந்துவிட்டதா 
பற்றும் பாசமும் புதைந்துவிட்டதா
காணவில்லை கவிஞனை
மீட்டுத்தாருங்கள் மக்களே .........