Monday, 27 April 2015

நின்று கொள்கிறாள்

வெண்ணிலவையும் செந்தாமரையும் கலந்து பூசிய வண்ணம் அவள்
சிரிப்பொலியால் புவியீர்ப்பை குறைப்பவள் அவள்
இனிக்கும் இசையை அள்ளித்தரும் அவள் பேச்சு

அழகிய குழந்தை காதுகள்
அக்குறுகிய காதுகளில் மிக குறுகிய தோடுகள்
பால் வண்ண முகம் பளிங்கு தேகம்
வகுடுடெடுத்து வாரிய குழல்கள்
புவியிலே சிறந்த சிற்பம் அவள்

கைபேசியும் வீணைபோல் இசைகிறது 
அவள் விரல்கள் தீண்டிய பிறகு. 

சிணுங்குகிறாள் , சிறரிக்கிறாள் ,
முறைக்கிறாள் , பின் புறமுதுகிட்டாள்
சற்று தலை சாய்த்து நின்றாள்
சிகை அலங்கரித்தாள் பின்
கடை கண்ணாள் பானம் எய்தாள்

அணிகலன்கள் ஏதும் இல்லை
ஆபாச உடையும் இல்லை
எனினும் எரிமலையின் நடுவே
பூச்செடி ஒன்றை நட்டு சென்றாள்

கண் பார்வை விட்டு பல மணி நேரம் ஆனாலும்
மணப் பார்வையில் மிக ஆழமாய் நின்று கொள்கிறாள்

என்று விடுமுறை

விடுதியில் வசிக்கும் மகனுக்கு என்று விடுமுறை
என்று வீடு திரும்புவான்
என்று நான் சமைத்த உணவை 
அவன் பருக நான் வயிராருவேன் - தாய்

 நாட்டை பிரிந்து வீட்டை பிரிந்து 
அயல் நாட்டில் அயராது உழைக்கும் எனக்கு
என்று விடுமுறை
என்று நாடு திரும்புவேன்
என்று தவழும் என் குழந்தையை
கைகளில் அள்ளி தழுவுவேன் - தந்தை

அனைவருக்கும் முன் அதிகாலை எழுந்து
இதர வேலைகளுடன் சமையலும் செய்து
கணவரை வேலைக்கு அனுப்பி
பின் வீடு திரும்பும் கணவருக்கு
மீண்டும் சமைத்து பரிமாறி
கணவர் உறங்கிய பிறகு உறங்கும் எனக்கு 
என்று விடுமுறை - மனைவி

 குறுகிய நான்கு சுவர் அறையில் 
கல்வியை போதிக்கும் வகுப்பிலிருந்து
என்று விடுமுறை
என்று சுவரில்லா மைதானத்தில்
கால வரைமுரைஇன்றி விளையாடுவேன் - மாணவன்